திருச்சியில் இருந்து கோவைக்கு சென்ற ‘Nuego’ எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது. இந்த பேருந்தில் பயணித்த 26 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். Omni Bus Coimbatore
திருச்சியில் இருந்து கோவைக்கு 26 பயணிகளுடன் ‘Nuego’ எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து சென்றது. கோவை கருமத்தம்பட்டி மேம்பாலம் அருகே, ஜூன் 29-ந் தேதி அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புகள் மீது மோதி நின்றது.
அப்போது பேருந்தின் பேட்டரியில் இருந்து புகை வெளியேறியது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் திடீரென பேட்டரியில் இருந்த புகை திடீரென தீ பிழம்பாக மாறி பேருந்து முழுவதும் எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.