தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை (அக்டோபர் 16) தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விடை பெறுகிறது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
இன்று
நீலகிரி
கோவை
திண்டுக்கல்
தேனி
விருதுநகர்
மதுரை
சிவகங்கை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
நெல்லை
கன்னியாகுமரி
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மொத்தம் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டக் கூடும்.
நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
தென்காசி
மதுரை
சிவகங்கை
ராமநாதபுரம்
விருதுநகர்
நெல்லை
தூத்துக்குடி
கன்னியாகுமரி
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகை
மயிலாடுதுறை
ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.