புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் 16-ந் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.
- அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு 1,388 வேட்புமனுக்களும் (817 வேட்பாளர்கள்)
- கேரளாவில் 140 தொகுதிகளுக்கு 2,117 வேட்புமனுக்களும் (1,252 வேட்பாளர்கள்)
- புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 514 வேட்புமனுக்களும் (442 வேட்பாளர்கள்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- மொத்தமாக 296 தொகுதிகளுக்கு 4,019 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 2,511 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை (Scrutiny) இன்று மார்ச் 24-ந் தேதியும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நாளை மறுநாள் மார்ச் 26-ந் தேதி மாலை 3:00 மணி வரையிலும் நடைபெறும்.
