நெய்வேலி சட்டசபை தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனின் சகோதரர் தி. திருமால்வளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தற்போதைய தேர்தலில் 1 இடம் ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் கூடுதல் தொகுதிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டது. இதனை திமுக ஏற்க மறுத்தது.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகுவதாக அதன் தலைவர் வேல்முருகன் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் நெய்வேலி சட்டசபை தொகுதியில் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் திருமால்வளவன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
திருமால்வளவன் வீடியோ:
