தொகுதி பங்கீடுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை – பியூஸ் கோயல்

Published On:

| By Pandeeswari Gurusamy

NDA

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தொகுதி பங்கீட்டுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சரும், பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி குறித்து முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ADVERTISEMENT

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை எந்தவிதமான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்தார்.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், “மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக அரசின் மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக- பாஜக இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம். தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்,” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

தேர்தல் பரப்புரை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை குறித்துப் பேசிய அவர், “தேர்தல் பிரச்சாரங்கள் முறைப்படி தொடங்கிய பிறகு, பிரதமரின் தமிழக வருகை மற்றும் பொதுக்கூட்டங்கள் குறித்த அட்டவணை இறுதி செய்யப்படும்,” என்றார்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே, பியூஷ் கோயலின் இன்றைய சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share