பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் இன்று (ஏப்ரல் 29) பிரதமர் மோடியை சந்தித்தார். nainar nagendran meets modi
தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்பு, நயினார் நாகேந்திரன் முதல்முறையாக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 28) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில், டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நயினார் நாகேந்திரன் மோடியை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, அதிமுக – பாஜக கூட்டணி, தமிழக பாஜக கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. nainar nagendran meets modi