தூத்துக்குடியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்யவுள்ளது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் பல்வேறு நிறுவனங்களை அணுகி முதலீடுகளை ஈர்த்து வருகிறது தமிழக அரசு.
பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தசூழலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடெக்ஸ் நிறுவனம் தன்னுடையை ஆலையை தூத்துக்குடியில் அமைக்கவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று(செப்டம்பர் 24) வெளியிட்ட அறிவிப்பில், “ரிலையன்ஸ் நுகர்வோர் கன்ஸ்யூமர் பிராடெக்ஸ் தனது அடுத்த யூனிட்டை அமைக்க தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் தொழில்துறை பூங்காவில் ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை அமைக்க இந்நிறுவனம் ரூ. 1,156 கோடியை முதலீடு செய்கிறது. 60 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது.
சிற்றுண்டிகள், பிஸ்கட்கள், மசாலாப் பொருட்கள், ஆட்டா, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யவுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 2000 உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.