சற்றே சரிந்த தங்கம் விலை!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold and silver rate on 24 September 25 in chennai

தங்கம் விலை நேற்று 85,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 24) ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.84,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலையில் மாற்றம் இல்லாம் ஒரு கிராம் ரூ.150க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 23) காலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,640க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.560 ஆக உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,120 வரை உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் தங்கம் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 1,680 வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share