சேலம் செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக இன்று (மார்ச் 30) காலை திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிரச்சார களம் அனல் வீசுகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரண்டு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இன்று மாலை சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களுக்களுக்காக ஸ்டாலின் ஆதரவு திரட்ட உள்ளனர்.

இந்தநிலையில், இன்று காலை சேலம் அக்ரஹாரம் கடை வீதியில் நடைபயணமாக சென்று திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் தொகுதி பிரச்சனைகளை கேட்டறிந்தார். நடைபயணத்தின் போது ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024 RCB Vs KKR: பெங்களூரு அணிக்கு ஷாக் கொடுத்த கொல்கத்தா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share