மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும் களமிறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

ADVERTISEMENT

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

ADVERTISEMENT

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்,

திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றனர்.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை: யாருடைய தீபம் ஒளிர்கிறது? | Minnambalam Mega Survey 2024 | Tiruvannamalai

மின்னம்பலம் சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போர்ன்விட்டா ‘ஹெல்த் டிரிங்க்’ அல்ல: மத்திய அரசு அதிரடி!

மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share