ADVERTISEMENT

அமைச்சராக செந்தில்பாலாஜியின் கடைசி அரசு விழா: கைவிடாத உதயநிதி

Published On:

| By Aara

udhayanithi sendhilbalaji

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியின் மீது உச்சநீதிமன்றத்தின் கெடு என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.  நாளை ஏப்ரல் 28  ஆம் தேதிக்குள் அமைச்சரா, ஜாமீனா என்ற உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு செந்தில்பாலாஜி பதில் சொல்ல வேண்டும்.

இத்தகைய பரபரப்பான நிலையிலும், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஏப்ரல் 27ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கோவையில் நடத்துகிறார்.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றம் கடுமையான நிபந்தனை விதித்த நிலையில் கூட, செந்தில் பாலாஜி தொடர்ந்து ரிலாக்ஸாகவும்,  நம்பிக்கையோடும்  இருப்பதாக மின்னம்பலத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

குறிப்பாக, ‘ஏப்ரல் 28 திங்கள் கிழமை உச்சநீதிமன்றம் என்னுடைய ஜாமீனை ரத்து செய்தால் கூட, அதற்கு இடைக்கால தடை கேட்டு உடனடியாக விண்ணப்பிப்போம். பி எம் எல் ஏ வழக்கில் வழக்கு விசாரணை முடிவதற்கு நீண்ட வருடங்கள் ஆகும் என்பதால் அதுவரை சிறையில் இருக்க வேண்டாம் என்ற அடிப்படையில்தான் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் வழக்கு விசாரணை இப்போதுதான் சாட்சிகள் சம்மன் என்ற நிலையில் இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்ய சட்டத்தில் இடமில்லை. அப்படி ரத்து செய்தாலும் ஸ்டே கிடைக்கும்’  என்று முதலமைச்சர் தரப்பிடம் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வளவு கடுமையாக தெரிவித்துவிட்ட நிலையில் 28ஆம் தேதி திங்கள்கிழமை வரை காத்திருந்து இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்று முதலமைச்சர் கருதுகிறார்.  அதனால் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. minister Senthil Balaji last government function

அதே நேரம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அதன் அடையாளமாகவும் செந்தில் பாலாஜியை திமுக தலைமை கைவிடவில்லை என்பதை கட்சியினருக்கு உணர்த்தும் விதமாகவும்…. இன்று ஏப்ரல் 27ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்துகிற விழாவில் கலந்து கொள்கிறார்.

கடந்த மார்ச் இறுதி வாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இதேபோன்ற, செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்த அரசு விழாவுக்கு கோவை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை பற்றிய தகவல்களால்,  கடைசி நேரத்தில் அந்த விழா முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டது.  இதுகுறித்து மின்னம்பலத்தில் உதயநிதி-செந்தில்பாலாஜி உரசலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மீண்டும் அந்த விழாவை  துணை முதல்வர் உதயநிதியை வைத்து நடத்துவதற்கு செந்தில் பாலாஜி பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த பின்னணியில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்னர், அவர் கோவையில் நடத்தும் விழாவுக்கு உதயநிதியை அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர்.

இன்று பிற்பகல்  2.30 க்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு கோவை செல்கிறார் துணை முதல்வர் உதயநிதி. minister Senthil Balaji last government function

முன்னதாக இன்று, கோவையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும், 800க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துக்கொள்ளும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்து கலந்துகொண்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதையடுத்து மாலை, அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நடக்கும் 25 ஆயிரத்து 526 பயனாளிகளுக்கு 21,531 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார்.  ஹாக்கி மைதானம்  உள்ளிட்ட புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் துணை முதல்வர்.

செந்தில் பாலாஜியோடு,அரசு விழாவில் மேடையை பகிர்ந்து கொள்ளும் துணை முதல்வர் உதயநிதி இந்த விழா முடித்து சென்னை வந்த பிறகு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தகவல் வெளியாகும் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக திமுக தலைமை உறுதியோடு இருக்கிறது என்பதையும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல திமுகவின் தேர்தல் பணிகள் செந்திபாலாஜியின் பொறுப்பில்தான் நடைபெறும் என்பதையும் காட்டும் வகையில் அமைச்சராக செந்தில்பாலாஜி நடத்தும் கடைசி அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். minister Senthil Balaji last government function

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share