6 மணிக்கு மேல அத பண்ண முடியாதாம் : அப்டேட் குமாரு 

Published On:

| By Kavi

இன்னைக்கு டீக்கடைக்கு போலாம்னு ஆபிஸ விட்டு வெளிய வந்தா, கூட வேல பாக்குற ஒருத்தன் தலதெறிக்க ஓடி வந்தான்.

அவன மறிச்சி, ‘என்னடா எதும் வெளிய கலவரமா?’னு கேட்டா, மணி என்ன?னு திருப்பி கேள்வி கேட்டான்

மணி 5.45னு சொன்னதுக்கு, “அய்யோ இன்னும் கால் மணி நேரந்தாம்ணே இருக்கு… என் லவ்வருக்கு இன்ஸ்டால ஸ்டோரி போட்டு ப்ரொபோஸ் பன்னனும்ணே?

’சரிடா அதுக்கு எதுக்குடா ஓடுற?’னு கேட்டதுக்கு, “என்னணே வெவரம் இல்லாம பேசுற, இன்னைக்கு 6 மணிக்கு மேல எதுவும் ஷேர் பண்ணா, 2 வருஷம் ஜெயிலுனு சொல்லிருக்காங்கண்ணே. அதான் அதுக்குள்ள என் லவ்வ அவளுக்கு ஷேர் பண்ண ஓடுறேன்”னு கைய தட்டிவிட்டு பறந்துட்டான்.

என்ன செய்ய… பிரச்சாரம் பண்ண கூடாதுனு அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சொன்னத… அவன் ஏதோ 144 ஊரடங்கு உத்தரவு மாறி எல்லோருக்கும்னு நெனச்சிட்டான் போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
” போகும்போது ” நாயை… சூனு சொல்லிட்டு் போ…..!!!
-Gold விலை ..!!!

balebalu
தேடக்கூடாது என்ற முன் முடிவோடு அனுப்பப்படும் நோட்டீஸுக்கு
“லுக் அவுட் நோட்டீஸ்” என்று பெயர்

Image

வசந்த்
நாங்கள் வம்பு சண்டைக்கு போவதில்லை. வந்த சண்டையை விடுவதில்லை! – எடப்பாடி பழனிசாமி!
கட்சியை கை மாற்றி விடாம இருந்தா சரி

பர்வீன் யூனுஸ்
திமுக மீதான கோபம் பாஜகவுக்கு சாதகம் – மோடி # பாஜக மீதான கோபம் இந்தியா கூட்டணிக்கு சாதகம் மாதிரியா?

கடைநிலை ஊழியன்
பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் – டிடிவி தினகரன் #
ஆமா.. ஆமா.. டோக்கன் குடுக்குறவங்களுக்கு ஓட்டு போடுங்க..

balebalu
ஒரே நாடு ஒரே தேர்தல் லாம் இருக்கட்டும்
முதல்ல “ஒரே Twitter ID ஒரே Poll” கொண்டுவாங்கப்பா
ஆளாளுக்கு போல் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க

அன்னையின் பிள்ளை
ஜி.எஸ்.டி பத்தி யார் கிளாஸ் எடுக்க முடியும் – மக்கள்
ஜி.எஸ்.டி ஒழுங்கா கட்டாதவனால தான் – நாட்டாமை

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏ.சி.சண்முகம் அரண்மனை போல் பள்ளிக்கூடங்களை கட்டுவார்” – சுந்தர். சி
#எது உங்க அரண்மனை படத்துல வர்ற மாதிரி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்லயா டைரக்டர் சார்..?

Chandru
திமுக மோடி ED IT CBI பார்த்து எல்லாம் பயப்படாத கட்சி…
அப்போ எதுக்கு தான் பயப்படுவ – கிளி ஜோசியம், பஞ்சு மிட்டாய், மீம்ஸ்…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

”உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” : அண்ணாமலை திட்டவட்டம்!

IPL 2024: நல்லவேளை அந்த தம்பிக்கு ஹெல்மெட் குடுக்கல… மீம்ஸ்களால் கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share