இன்னைக்கு சாயங்காலம்… டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ரேடியோல ரஜினியோட வானத்த பாத்தேன், பூமிய பாத்தேன்’ பாட்டு ஓடிட்டு இருந்துச்சி..
அதுக்கு ஏத்தமாறியே குடிமகன் ஒருத்தர், வானத்தையும், பூமியும் பாத்துட்டு இருந்தான்.. அத பாத்துட்டு, அவன் கிட்ட போயி ‘என்ன தம்பி.. அடிக்கிற வெயில்ல இந்த ரீல்ஸ்லாம் தேவையானு கேட்டேன்.
அதுக்கு அவரு, “நீ வேற தம்பி.. இந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வர்றாங்களாம். அங்க கிளம்பிட்டதா சொன்னாங்க. அதான நம்ம டீக்கட பக்கம் அவங்க எறங்குறாங்களா?னு பாத்துட்டு இருக்கேன்”னு சொன்னாரு பாருங்க… அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls update kumaru

ச ப் பா ணி
பாத்து செய்ங்க என்பது
வச்சு செஞ்சிடாத என்பதன் நாகரிக வெர்ஷன்

பரமசிவம் ராமசாமி
டாஸ்மாக்ல பத்து ரூபாய் அதிகமா வாங்குறாங்கனு போராடுற யாரும்…!
மார்க்கட்ல தக்காளி கிலோ பத்து ரூபாய்க்கு வித்தா .. விவசாயிக்கு என்ன விலை கிடைக்கும்னு யாரும் பேசமாட்டாங்க…
ஏன்னா.. அதுதான் அரசியல்..

மயக்குநன்
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என எப்போது சொல்லவேண்டுமோ அப்போது சொல்வோம்!- திருமாவளவன்.
மைண்ட் வாய்ஸ்லதானே..?!

குருநாதா
டீ விக்க வர்றியா மாப்ள?
எப்ப மாமா டீ கடை ஆரமிச்ச?
TVK வர்றியானு கேட்டேன் மாப்ள
Mannar & company
வாட்ஸ் அப்பில் புதுசா அப்டேட் வந்திருக்குன்னு சொல்றாங்க..
இன்ஸ்டாகிராம்ல புதுசா அப்டேட் வந்திருக்குன்னு சொல்றாங்க..
நம்ம வாழ்க்கைக்கு புதுசா எப்பதான் அப்டேட் வரப்போகுதோ தெரியல!!?

ச ப் பா ணி
எல்லாரும் ஈசியா கட்சி மாறுறாங்க.. நம்மால் தான் ஈசியா கம்பெனிகூட மாற முடியல
iQKUBAL
Me to the Me :~
எந்த போன்ல, எந்த ஆங்கிள்ல ஃபோட்டோ எடுத்தாலும் கண்றாவியா இருக்கியேடா..

மயக்குநன்
மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை திரட்டுவோம்!- முதல்வர் ஸ்டாலின்.
மொதல்ல… ஒட்டாம இருக்கிற ‘இ.ண்.டி.யா’-வை திரட்ட முடியுதான்னு பாருங்க..!
லாக் ஆஃப் memes trolls update kumaru