திமுக கூட்டணியில் மதிமுகவின் 4 தொகுதிகள் எவை? வேட்பாளர்கள் யார்?

Published On:

| By Mathi

MDMK Candidates

திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திமுகவுக்கு மொடக்குறிச்சி, கடையநல்லூர், மதுரை தெற்கு மற்றும் சீர்காழி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் மொடக்குறிச்சி தொகுதியில், தொழிலதிபரான எஸ். செந்தில்நாதன், மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறார். ஹோட்டல் தொழிலதிபரான செந்தில்நாதன் தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

கடையநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளராக திமு ராஜேந்திரன் போட்டியிடுகிறார். மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக திமு ராஜேந்திரன் உள்ளார்.

மதுரை தெற்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான பொடா பூமிநாதன் மீண்டும் மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறார். 2021-ம் ஆண்டு தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பூமிநாதன், அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சரவணனை 6,615 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ADVERTISEMENT

தீப்பெட்டி சின்னத்தில் செந்தில் செல்வன்

சீர்காழி தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக வேட்பாளராக செந்தில் செல்வன் போட்டியிடுகிறார். 1996 மற்றும் 2001 சட்டசபை தேர்தல்களில் சீர்காழி தொகுதியில் போட்டியிட்டவர் செந்தில் செல்வன்.

ADVERTISEMENT

திமு ராஜேந்திரன், செந்தில் செல்வன், பூமிநாதன் ஆகியோர் மதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பவர்கள் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share