திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) வெளியிட்டார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று மக்களிடம் கேட்டறிந்து அறிக்கையை தயாரித்தது.
இந்நிலையில் இன்று தேர்தல் அறிக்கையை வாசித்து வரும் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
