சொத்துக்குவிப்பு வழக்கு… துரைமுருகனை தொடர்ந்து சிக்கலில் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

Published On:

| By Selvam

mrk Panneerselvam disproportionate assets

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) தீர்ப்பளித்தது. mrk Panneerselvam disproportionate assets

கடந்த 1996 – 2001, 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அவரது மனைவி செந்தமிழ் செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ADVERTISEMENT

இந்த வழக்குகள் கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. mrk Panneerselvam disproportionate assets

ADVERTISEMENT

எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தரப்பில், “குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் வருமானத்திற்கு அதிகமான சொத்து என லஞ்ச ஒழிப்புத்துறை தவறுதலாக கணக்கிட்டுள்ளது. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை மேற்கோள் காட்டி, குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அதனை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறிவிட்டதாகவும் வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த இரண்டு வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுவித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து தினமும் விசாரணை நடத்தி, ஆறு மாதங்களுக்குள் இந்த வழக்குகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஏப்ரல் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். இன்றைய தினம் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு எதிரான இரண்டு சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அவரை விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளார். mrk Panneerselvam disproportionate assets

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share