மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 6ஆவது நாளாக எதிக்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதனையடுத்து மணிப்பூர் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமரை பதிலளிக்க வைப்பதற்காக இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நேற்று மக்களவை சபாநாயகர் ஏற்று கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடரின் 6வது நாளான இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்போது பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாநிலங்களவையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை வாசித்தார்.
அப்போது, பாஜக எம்பிக்கள் “மோடி, மோடி” என்று கோஷமிட்ட நிலையில், அதற்கு பதிலடியாக இதை எதிர்கொள்ள இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இந்தியா, இந்தியா என்று முழங்கினர்.
#WATCH | NDA MPs chant "Modi, Modi" in Rajya Sabha as EAM Dr S Jaishankar makes a statement on the latest developments in India's Foreign Policy. To counter this, INDIA alliance MPs chant "INDIA, INDIA." pic.twitter.com/REJgfm50h2
— ANI (@ANI) July 27, 2023
இரு தரப்பினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து ராஜ்ய சபாவும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளாது.
கிறிஸ்டோபர் ஜெமா
2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் என்.எல்.சி தொழிலாளர்கள்!
