புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் போட்டியிடும் 13 திமுக வேட்பாளர் பட்டியலை திமுக இன்று (மார்ச் 24) வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 16, திமுக 12, விசிக-1, சிபிஐ 1 இடத்தில் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் விபரம்
வில்லியனூர் – இரா.சிவா
மங்கலம் – எஸ்.எஸ்.ரங்கன்
திருபுவனை – பி.அங்காளன்
பாகூர் -ஆர்.ஆர்.செந்தில்குமார்
முதலியார்பேட்டை – லி.சம்பத்
உப்பளம் – அனிபால்கென்னடி
உருளையன்பேட்டை – எஸ்.கோபால்
நெல்லித்தோப்பு வே.கார்த்திகேயன்
ராஜ்பவன் – விக்னேஷ் கண்ணன்
காலாப்பட்டு – ஏ.செந்தில்
கதிர்காமம் – ப.வடிவேலு
காரைக்கால் தெற்கு -ஏ.எம்.எச்.நாஜிம்
நிரவி டி.ஆர்.பட்டினம் – எம்.நாக தியாகராஜன்
புதுச்சேரியில் விசிக 3 தொகுதிகளில் தனித்தே போட்டியிடும் என திருமாவளவன் இன்று காலை அறிவித்திருந்த நிலையில் திமுக கூட்டணியில் உழவர்கரை தொகுதி விசிகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
