இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக கடிதம்.. விஜய் முன்வைத்த குற்றச்சாட்டு ?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்தையும் கட்டாயம் அழைக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் எழுதி உள்ள கடிதத்தில், “தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு கணிசமான ஆதரவு உள்ளது; வரவிருக்கும் தேர்தலில் மாநிலம் தழுவிய அளவில் போட்டியிட உள்ளோம். இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா, இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக வேண்டும் வலியுறுத்துகிறோம்.

ADVERTISEMENT

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் நாங்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து தவெக விலக்கப்படுகிறது. இது பங்கேற்பில் சமத்துவத்தை குறைக்கிறது.

மாநிலத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்கும் வகையில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய அறிவிப்பு வழங்கி தவெகவை அழைக்க வேண்டுமென மிகவும் பணிவுடன் கோருகிறோம். எங்கள் கட்சி, ஆணையத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் உங்களது மேற்பார்வை அதிகாரங்களின்கீழ், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். இது குறித்து எங்களது கோரிக்கை பரிசீலிப்பதோடு ; வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் விவாதங்களிலும் தவெக சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share