கார் வாங்கினால் 30,000 வரை சேமிப்பு: மாருதி சுசுகியின் அட்டகாசமான சலுகை!

Published On:

| By Santhosh Raj Saravanan

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது சிறிய ரக கார்களுக்கான ‘விலை பாதுகாப்புத் திட்டத்தை’ (Price Protection Scheme) அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ், Alto K10, S-Presso, Celerio மற்றும் WagonR போன்ற சிறிய ரக கார்களின் விலைகள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால், வாகனங்களின் விலையில் ஏற்படக்கூடிய உயர்வால் வாடிக்கையாளர்கள் எந்தப் பாதிப்பையும் சந்திக்க வேண்டியிருக்காது.

ADVERTISEMENT

குறிப்பிடத்தக்க வகையில், மாருதி சுசுகி கடந்த மே மாதத்திலேயே தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் ரூ. 30,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.

ஜூன் 14ஆம் தேதி வரை செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் சிறிய ரக கார்களின் விலையில் மாற்றம் இருக்காது என்று மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஜூன் 14க்குள் Maruti Alto K10, S-Presso, Celerio அல்லது WagonR ஆகியவற்றை முன்பதிவு செய்தால் அவர்கள் உயர்த்தப்பட்ட விலையைச் செலுத்த வேண்டியதில்லை. பழைய விலையிலேயே காரை வாங்க முடியும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சிறிய ரக கார் வாங்குதலில் ரூ.30,000 வரை சேமிக்க முடியும்.

ADVERTISEMENT

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறுகையில், “எங்கள் விற்பனைப் பங்காளர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த விலை பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம். அவர்களின் கோரிக்கை எளிமையானது. கார் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வைக் கண்டு பின்வாங்கக்கூடாது.

எனவே, சிறிய ரக கார் வாங்குபவர்களுக்காக இத்திட்டத்தை நாங்கள் முடிவு செய்தோம். நீங்கள் முன்பதிவு செய்தால் உங்களுக்குச் சில சலுகைகள் அல்லது நிவாரணம் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

பணவீக்க அழுத்தம் மற்றும் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில் வாகனங்களின் விலை உயர வாய்ப்புள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணவீக்க அழுத்தம் மற்றும் செலவுகள் அதிகரிப்பு காரணமாக, ஜூன் மாதம் முதல் தனது அனைத்து வாகனங்களின் விலையையும் ரூ. 30,000 வரை உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி இந்தியா கடந்த மாதம் அறிவித்திருந்தது. இருப்பினும், விலை உயர்வின் துல்லியமான அளவு ஒவ்வொரு மாடலுக்கும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share