மஹுவா தொகுதியில் போட்டியிட்ட லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று ( நவம்பர் 14) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
இந்நிலையில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
