ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா

Published On:

| By Selvam

தேர்தல் விடுமுறை நாளை கொண்டாடும் விதத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு, வித்தியாசமான உணவு செய்து தர வேண்டும் என்று நினைப்பவர்கள் பாரம்பர்ய இனிப்பான இந்த சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா செய்து அசத்தலாம். அனைவருக்கும் ஏற்ற இது, கோடைக்கேற்ற இனிப்பாகவும் அமையும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

துருவிய சிவப்பு முள்ளங்கி – ஒரு கப்
பனங்கற்கண்டு – ஒன்றரை கப் (மிக்ஸியில் நன்கு பொடிக்கவும்)
நெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

பனங்கற்கண்டை மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிவப்பு முள்ளங்கி துருவலுடன் சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில்போட்டு மையாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் பனங்கற்கண்டு பொடியைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பனங்கற்கண்டு கரைந்ததும் வடிகட்டி, பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும். லேசான கம்பிப்பதம் வந்ததும் அரைத்த முள்ளங்கி விழுதைப் போட்டு  கிளறவும். அவ்வப்போது சிறிதளவு நெய் சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

IPL 2024 : மும்பையை அச்சுறுத்திய அஷுதோஷ் சர்மா… போராடி தோற்ற பஞ்சாப்!

பாரபட்சம்னா என்ன தெரியுமா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share