MIvsPBKS : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் நேற்று (ஏப்ரல் 18) நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முல்லன்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்தார்.
சென்னைக்கு எதிரான போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, இன்று தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அவர் 3 சிக்சர், 2 பவுண்ரியுடன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் வெளியேறினாலும், திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளுக்கு 192 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளும், சாம் கரண் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 193 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பமே பஞ்சர் ஆனது. ஜெரால்டு கோட்ஸி வீசிய முதல் ஓவரில் ப்ராப் சிம்ரன் சிங் கோல்டன் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
2வது ஓவரை வீசிய பும்ராவின் வேகத்தில் சிக்கி ரோஸ்ஸோ(1) மற்றும் சாம் கர்ரன் (6) ரன்னில் வெளியேறினர்.
அதற்கடுத்த ஓவரில் லிவிங்ஸ்டனும் (1) வந்த வேகத்தில் நடையை கட்ட பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடி கண்டது.
5வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்பீரித் சிங் பாட்டியா மற்றும் ஷசாங்க் சிங் இணை 35 ரன்கள் குவித்தது. இதனால் பவர்பிளேயில் 40 ரன்கள் சேர, 7வது ஓவரில் ஹர்பீரித் சிங் 13 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் 7வது விக்கெட்டுக்கு இணைந்த ஷஷாங்க் சிங் – அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடினர். இருவரின் அதிரடி பேட்டிங் பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கண்டது.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும் ஒருபுறம் அதிரடி பேட்டிங்கை தொடர்ந்த அஷ்தோஷ் சர்மா தொடர்ந்து மும்பை அணியின் பவுலர்களை மிரட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
Confidence & composure! ✨
Ashutosh Sharma reaches his Maiden IPL fifty and he's kept the chase well & truly alive! 🔥
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱 #TATAIPL | #PBKSvMI pic.twitter.com/YUIR7gn9Bu
— IndianPremierLeague (@IPL) April 18, 2024
கடைசி 4 ஓவருக்கு அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 16வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுகொடுக்க, 17வது ஓவரை வீசிய கோட்ஷியின் பந்தில் நபியிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்னில் அஷுதோஷ் சர்மா ஆட்டமிழந்தது பஞ்சாப் அணிக்கு பேரிடியாக விழுந்தது. மேலும் அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
இதனால் கடைசி இரண்டு ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு பஞ்சாப் தள்ளப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரபாடா முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க, பஞ்சாப் அணிக்கு ஒரு விக்கெட் கைவசம் இருந்த நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
ஆகாஷ் மத்வால் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரபாடா, டீப் பாயிண்ட் திசையில் பந்தை விரட்டி விட்டு 2 ரன்கள் ஓட முயற்சித்தார். ஆனால் பந்தை பிடித்த நபி துல்லியமாக இஷான் கிசனிடம் அதை பாஸ் செய்ய, ரபாடா ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் பஞ்சாப் அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை அணி தரப்பில் 4 ஓவர்களை வீசி, 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 7வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாரபட்சம்னா என்ன தெரியுமா? : அப்டேட் குமாரு
‘கமான் செல்வா…’ செல்வப்பெருந்தகைக்கு சாண்ட்விச் ஊட்டிவிட்ட ராகுல்