வாரத்தின் முதல் நாளை மகிழ்ச்சியாக தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹெல்த்தியான டிஷ் இந்த கிரீன் சாலட். ஞாயிற்றுக்கிழமை ஷாப்பிங் செல்பவர்கள் இதை வாங்கி வைத்துக்கொண்டால்… திங்கட்கிழமை காலை சமையலறைக்குச் செல்லாமலே இந்த சாலட்டை செய்து சாப்பிட்டு நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.
என்ன தேவை?
லீக்ஸ் (வெங்காயத்தாளைப் போன்றது – டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்… மெல்லியதாக நீளமாக நறுக்கியது) – ஒரு கப்
செலரி (மெல்லியதாக நீளமாக நறுக்கியது) – ஒரு கப்
வெள்ளரி (மெல்லியதாக நறுக்கியது) – ஒரு கப்
குடமிளகாய் (மெல்லியதாக நறுக்கியது) – ஒரு கப்
நறுக்கிய லெட்யூஸ் – ஒரு கப்
நறுக்கிய பார்ஸ்லி – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு – கால் கப்
வெள்ளை வினிகர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகுப்பொடி – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
நறுக்கிய காய்கறிகள், கீரைகளுடன், உப்பு மற்றும், வினிகர், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கடுகுப் பொடி கலந்து ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்கும் அவரு தான் காரணமா? அப்டேட் குமாரு
T20 World Cup: இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த பரிசு!