இதுக்கும் அவரு தான் காரணமா? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிச்சிக்கிட்டு இருந்தபோது, “டெல்லி, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து இன்னைக்கு குஜராத்லயும் விமான நிலைய மேற்கூரை இடிஞ்சி விழுந்துருக்கு பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல…

நான் சிரிச்சிக்கிட்டே, “இந்த விமான நிலையங்களுக்கு எல்லாம் செங்கல் வச்சி அடிக்கல் நாட்டுனது ஜவஹர்லால் நேரு. அதனால இதுக்கெல்லாம் அவர் தான் பொறுப்புன்னு நம்ம ஆளுங்க இப்பவே உருட்ட ஆரம்பிச்சிட்டாங்கன்னு” சொன்னேன்…

நண்பர், “பாவம்யா அந்த மனுஷன். இவனுங்க எந்த தப்பு பண்ணாலும், அவரு மேல பழியை போட்றானுங்கன்னு” கமெண்ட் பண்ணாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
ஐம்பது காசு கொடுத்து கேபிள் டிவியில் புதுப்படம் பார்த்ததன் அப்டேட் வெர்சனே OTT யில் படம் பார்ப்பது.
தங்க.காளிப்பாண்டி

*மாப்ள சரக்கு ‘சாப்ட் ட்ரிங்க்’ மாதிரி இருக்கு*

*டாஸ்மாக்குல வாங்கியாந்தியா? அது அப்புடித்தான் இருக்குமுன்னு துரைமுருகன் மூத்த அமைச்சரே சொல்லிட்டாரே*

கடைநிலை ஊழியன்
விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு ஒரு ராஜதந்திரம் – ஆர்.பி.உதயகுமார்
# அனைத்து ராஜ தந்திரங்களையும் கற்று வைத்து இருக்கீர்கள் மன்னா..
Mannar & company™
உங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் இன்னும் நோட்டு, புத்தகங்கள் கொடுக்காமல் இருக்காங்க என்றால், நீங்கள் இன்னும் அந்த பள்ளிக்கு ‘நோட்டுகள்’ கொடுக்கவில்லை என்று அர்த்தம்!! #தனியார்பள்ளிபரிதாபங்கள்
கடைநிலை ஊழியன்
மறக்க முடியாத விஷயத்த மறக்க என்ன பண்ணனும்.. ?
மறக்கணும் னு நினைக்க கூடாது.. அவ்ளோ தான்..
மறக்கணும் நினைக்கல னா, மறந்துருமா.. ?
அதான் இல்ல.. மறக்கவே முடியாது..
கடைநிலை ஊழியன்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கருப்பட்டி காபி ன்னு போட்டுருந்த ஒரு கடையில போயி சக்கரை இல்லாம ஒரு காபி போடுங்கன்னு சொன்னேன், வித்தியாசமா பாக்கறாங்க பிரண்ச்..
கடைநிலை ஊழியன்
திங்கள்கிழமை ஸ்கூலுக்கு கூட போயிறலாம் போல, ஆனா இந்த ஆபீஸ்க்கு போறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு !!
தர்மஅடி தர்மலிங்கம்
பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புகின்றன – குடியரசுத் தலைவர்!
மணிப்பூர் பிரச்சனைக்கே இன்னும் தீர்வு காணலைங்கற விஷயம் நமக்கு மட்டும் தான தெரியும்..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ரிலையன்ஸ் ஜியோ அதிபர் அம்பானியின் அடுத்த சுற்று கொண்டாட்டம். மகன் திருமணத்துக்கு முன் ஏழை ஜோடிகளுக்கு திருமணம்
~ ஜியோ யூசர்ஸ் ~ உடம்ப இரும்பாக்கிகோ டா கிரிகாலா ?!
கடைநிலை ஊழியன்
எதுக்குப்பா சோகமா இருக்க.. மாச கடைசினா, எல்லாருக்கும் கஷ்டம் தான்.. ஃப்ரீயா விடு..
சம்பளம் போட்டு ஒரு வாரம் முடிஞ்சதுமே, எனக்கு மாச கடைசி தான்டா..
+1
0
+1
8
+1
0
+1
5
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *