டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு அறிவித்துள்ளது பிசிசிஐ.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருத்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “டி20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
டி20 தொடர் முழுவதும் இந்திய அணி வீரர்கள் தங்களது திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இந்த சாதனைக்காக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெத்து காட்டும் அஜித்…. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் எப்படி?
விக்கிரவாண்டி: எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும் ராமதாஸ்