‘ஆர் ஆர் ஆர்’ பாணியில் ஒரு வரலாற்று புனைவு! Kesari Chapter 2 Movie Review
ஏற்கனவே நடந்து முடிந்த சில நிகழ்வுகளைக் கையிலெடுத்துக்கொண்டு, ‘இப்படி நடந்திருந்தால்’, ‘அப்படி நடந்திருந்தால்’ என்று புனைவின் வழியே அவற்றை வெவ்வேறு திசை நோக்கி இழுப்பதும் கற்பனைக்கதைகளின் ஒரு வகையே. இந்தியாவில் அந்த வகைமையில் சில கதைகள் ஏற்கனவே வந்திருந்தாலும், இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ அதில் வெற்றிகரமான திரைப்படமாக அமைந்தது. அந்த பாணியைப் பின்பற்றி ஒரு வரலாற்றுப் புனைவாக அமைந்திருக்கிறது ‘கேசரி சாஃப்டர் 2: அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக்’ திரைப்படம். Kesari Chapter 2 Movie Review
கரண்சிங் தியாகி எழுதி இயக்கியிருக்கிற இப்படத்தில் அக்ஷய் குமார், ரெஜினா கசாண்ட்ரா, மாதவன், அனன்யா பாண்டே, சிமோன் பைஸ்லே, அமித் சியால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Kesari Chapter 2 Movie Review
இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது? Kesari Chapter 2 Movie Review
தெரிந்த கதை! Kesari Chapter 2 Movie Review
1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் ஜெனரல் டயர் எனும் ஆங்கிலேய அதிகாரியால் நிகழ்த்தப்பட்ட படுகொலை இந்திய சுதந்திர வரலாற்றில் ஒரு கொடூரமான அத்தியாயம். அது எழுச்சிமிக்க பல சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கியதும் நாம் அறிந்ததே. அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது ‘கேசரி சாஃப்டர் 2: அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக்’. Kesari Chapter 2 Movie Review
ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் ரெஜினால்டு டயர் (சிமோன்ஸ் பைஸ்லே) நிகழ்த்திய படுகொலையைக் காட்டுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

அதேநேரத்தில், ஆங்கிலேய அரசில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர் சி.சங்கரன் நாயருக்கு ’சர்’ பட்டம் வழங்கப்படுகிறது. காரணம், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் வாதாடி அவர் பெற்றுத் தந்த வெற்றிகள். Kesari Chapter 2 Movie Review
ஜாலியன் வாலாபாக் பற்றிய விசாரணைக் குழுவில் இடம்பெற்றபிறகு அவரது பார்வை மாறுகிறது. அங்கு நிகழ்ந்த வன்முறையை அவரால் உணர முடிகிறதே தவிர, அதனை எதிர்த்துக் குரல் எழுப்ப முடிவதில்லை. Kesari Chapter 2 Movie Review
ஆனால், பர்கத் எனும் பதின்ம வயதுச் சிறுவன் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய உண்மைகள் உலகுக்குத் தெரிய வேண்டுமென்று போராடுகிறார். அதில் தனது தாயையும் தங்கையையும் அவர் இழந்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதத்தைப் புகுத்தியதாகச் சொல்லி அவரது தந்தை கிரிபால் சிங்குக்கு எதிராக வாதாடித் தண்டனை பெற்றுத் தந்தவர் சங்கரன்.
விசாரணைக் குழுவின் அறிக்கையில், ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதமேந்திப் போராடிய கும்பல் மீது ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் பர்கத் மரணித்த தகவல் கிடைக்கிறது.
அந்த நிகழ்வு சங்கரனின் வாழ்வைத் தடம் புரட்டுகிறது. வழக்கறிஞர் தில்ரீத் கில் (அனன்யா பாண்டே) உடன் இணைந்து ஜாலியன் வாலாபாக் சம்பவம் ஒரு படுகொலை என்று குறிப்பிட்டு வழக்கு தொடுக்கிறார் சங்கரன்.
அவரது வாதங்களால் குட்டு அம்பலப்பட்டுவிடக் கூடாது என்று சங்கரனின் ஆரம்பகால நண்பரான வழக்கறிஞர் நெவிலே மெக்கென்லியை (மாதவன்) அழைத்து வருகிறது டயர் தரப்பு.
நண்பனோடு ஏற்கனவே முரண் கொண்டிருக்கும் மெக்கென்லி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சங்கரனை நீதிமன்றத்தில் தோற்கடிக்க முனைகிறார்.
மெக்கென்லி மற்றும் ஜெனரல் டயர் தரப்பினரின் முயற்சி பலித்ததா? சங்கரன் வழக்கில் வென்றாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இப்படத்தில் ஜாலியன் வாலாபாக் நிகழ்வுக்கு எதிராக சங்கரன் வழக்கு தொடுத்தார் என்பது உண்மை. ஆனால், ’அவர் இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் வாதாடியிருக்க மாட்டார்’ என்று சொல்லும் அளவுக்கு அப்பாத்திரத்தைப் பக்கம் பக்கமாக வசனம் பேச வைத்து, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ‘தேசபக்தி’யை ஊட்ட முயன்றிருக்கிறது இப்படத்தின் உள்ளடக்கம். அதுவும் கிளைமேக்ஸ் நிகழும் கடைசி 20 நிமிடக் காட்சிகள் ‘அசலான’ வரலாற்று நிகழ்வுகளை அறிய விரும்புபவர்களுக்கு நிச்சயம் அலர்ஜி ஏற்படுத்தும்.
இப்படத்தின் யுஎஸ்பி அதுவே; போலவே, மிகப்பெரிய பலவீனமும் அதுவே..!

’கமர்ஷியலான’ திரை அனுபவம்! Kesari Chapter 2 Movie Review
சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் இந்திய ஆளுமைகளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வெற்றிகளே கிடைத்தன. அதுவும் கூட, ‘அதன்பிறகு சுபிட்சமாக வாழ்ந்தார்கள்’ என்று அவர்களது ஹீரோயிசத்தை குன்றில் ஏற்ற முடியாதவையாக இருப்பவை.
அதை அப்படியே ‘உல்டா’வாக்கி, ‘ஒரு நாயகன் உருவாகிறான்’ பாணியில் கதை சொன்னால் எப்படியிருக்கும் என்று காட்டியிருக்கிறது ‘கேசரி சாஃப்டர் 2: அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக்’.
ரகு பாலத், புஷ்பா பாலத் எழுதிய ‘தி கேஸ் தேட் ஷுக் தி எம்பயர்’ எனும் புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை இயக்குனர் கரண் சிங் தியாகி உடன் இணைந்து அம்ரித்பால் சிங் பிந்த்ரா, சுமித் சக்சேனா ஆகியோர் மேற்கொண்டிருக்கின்றனர்.
ஒரு ‘கிளாசிக்’கான வரலாற்றுப் படம் பார்க்கிற உணர்வைத் தந்திருக்கிறது தெபோஜீத் ரேயின் ஒளிப்பதிவு.
ரீட்டா கோஷின் தயாரிப்பு வடிவமைப்பு, அதற்கேற்ற பின்னணியை கேமிராவுக்கு அமைத்து தந்திருக்கிறது.
காட்சிகளின் வழியே கதை சொல்லல் கொஞ்சமும் ‘மிஸ்’ ஆகாத வண்ணம் படத்தைத் தொகுத்திருக்கிறார் நிதின் பெய்த்.
சாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் பாடல்கள் ’வழக்கமானதாக’ தோற்றம் தருகின்றன. அதேநேரத்தில், ஹீரோயிசம் நிறைந்த ஒரு சமகால கமர்ஷியல் படத்திற்கான பின்னணி இசையை இதற்குத் தந்து ரசிகர்களை துடிப்பேற்றியிருக்கிறார் சாஸ்வத்.
சங்கரனாக அக்ஷய் குமார், அவரது மனைவி பார்வதியாக ரெஜினா கசாண்ட்ரா, தில்ரீத் கில் ஆக அனன்யா பாண்டே, மெக்கென்லியாக மாதவன், டயர் ஆக சிமோன் பைஸ்லே உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
அக்ஷய் குமார், மாதவன் இருவருமே இப்படம் ‘கமர்ஷியலான திரையனுபவம்’ நமக்குக் கிடைக்கத் துணை நிற்கின்றனர். அவர்களது நடிப்பு இந்த கற்பனைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறது என்பதே உண்மை.

குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் அக்ஷய் குமார், மாதவனுக்கு இடையேயான ‘டக் ஆஃப் வார்’ ரசிகர்களைக் குதூகலப்படுத்துகிறது.
ரெஜினா, அனன்யா, அமித் சியால், அலெக்ஸ் ஓ’நெல், கிரிஷ் ராவ், ரோகன் வர்மா, லூக் கென்னி உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
அவர்களில் டயர் ஆக வரும் சிமோன் பைஸ்லேவிடம் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’கை காண நேர்கிறது.
இப்படியொரு ‘சுதந்திரப் போராட்ட வரலாற்று’க் கதையில் மசாபா குப்தாவின் கவர்ச்சி நடனம் வேறு வந்து போகிறது. அது எதற்காக என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இப்படத்தின் காட்சியமைப்பு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஏனென்றால், நடந்தவற்றில் இருந்து அவை பெருமளவு தூரம் விலகி நிற்பதுதான்.
கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஜெனரல் டயர் அருகே சங்கரன் வந்து நிற்பதாக, இதில் ஒரு காட்சி உண்டு. ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிமைகளில் நீயும் உண்டு என்பதை மறந்துவிடாதே’ என்று சங்கரனைப் பார்த்து டயர் கர்ஜிக்க, அவரை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு ‘சாம்ராஜ்யம் சுருங்கிக் கொண்டிருக்கிறது’ என்கிறார் சங்கரன்.
தியேட்டரில் இந்த காட்சிக்கு ‘விசில்’ பறக்கிறது. இது ஒரு உதாரணம் தான். இது போன்ற பல காட்சிகள் இதிலிருக்கின்றன.
அது உங்களுக்கு ஏற்புடையதுதான் என்றால், இந்த ‘கேசரி சாஃப்டர் 2: அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக்’ படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம், கொண்டாடலாம்.. ‘ஏற்க முடியாது’ என்பவர்கள் குறைகளைக் குவிக்காமல் இருக்க இப்படத்தைப் பார்க்காமல் தவிர்க்கலாம்..!