நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. kenishaa reply on rumor that she is pregnant
இதற்கிடையே தனது தோழி பாடகி கெனிஷாவுடன் ரவி பொது இடங்களுக்கு ஜோடியாக சென்று வருகிறார். சமீபத்தில் இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்திற்கு சென்று வந்தது சோசியல் மீடியாவில் தீயாக பரவியது.

அதனையடுத்து ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னதாக இருவரும் ஜோடியாக குன்றக்குடி முருகன் கோயிலுக்குச் சென்றதும் வைரலானது.

இதற்கிடையே சிலர் கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் Behindwoods TVக்கு கெனிஷா அளித்த பேட்டியில், “நான் கர்ப்பமாக இருக்கிறேனா? எனது போஸ்டின் கமெண்ட்ஸ் பக்கத்தில் கூட நான் கர்ப்பமாக இருப்பதாக பதிவிடுகிறார்கள். கர்ப்பிணி வயிறு இப்படித்தான் இருக்குமா? நான் கர்ப்பமாக இல்லை… எனக்கு ஒரு அழகான சிக்ஸ் பேக் இருக்கிறது” என்றார்.

மேலும் அவர், “யார் என்ன சொன்னாலும், அது எல்லாம் கர்மாவாக அவர்களுக்குத் திரும்பி வரும். உண்மையும் பொய்யும் மிக விரைவில் தெரியவரும். அதுவரை, எல்லோரும் வீட்டில் பிரியாணி செய்து, சாப்பிட்டு நிம்மதியாக இருக்கட்டும். நானும் நிம்மதியாக இருக்கிறேன்” என்று கூறினார்.
முன்னதாக தன்னை குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிவிப்பு நோட்டீஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.