பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் திரைப்படம் கடந்த மே 16-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் மாமன் படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப்பை சூரி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக சூரி வெளியிட்டுள்ள பதிவில்,
“ஹேஷம் அப்துல் வகாப் இசையால் உயிரூட்டும் ஒரு பேர்ப் பொக்கிஷம். இவரைப் பற்றி முதலில் கூறியது நடிகர் நானி சார். Actor Soori praises the music composer Hesham
பலரிடம் கேட்ட பின்பும், அவருடைய நேரடியான பாராட்டுகள் எனக்கு உறுதியை தந்தன. பிறகு இயக்குநரும் திங் மியூசிக் சந்தோஷும் இணைந்து பேசியதும், ஒரு அழைப்பில் ஹேஷம் நம்முடன் இணைந்தார். Actor Soori praises the music composer Hesham

இது உணர்வின் தேர்வாக அமைந்தது. அல்லாஹ்வின் அருள் பெற்றவர் ஹேஷம். அவரது இசையில் எப்போதும் பாசமும் அன்பும் ஓடும். அதே நம்பிக்கையோடு மாமன் பயணமும் தொடங்கியது.
இன்று இந்தப் படம் உணர்வுகளை தொட்டுக் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்கு ஹேஷமின் இசை ஒரு முக்கிய காரணம். நன்றி ஹேஷம், உங்கள் இசையைப்போலவே, வாழ்க்கையையும் அன்போடு வாழுங்கள். உங்கள் இடம் உறுதியானது” என்று தெரிவித்துள்ளார்.
Actor Soori praises the music composer Hesham

