ADVERTISEMENT

கரூர் துயர சம்பவம்.. 8 வழக்குகளை இன்று விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

Published On:

| By Mathi

Karur High Court

நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான 8 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 27) விசாரிக்கிறது.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த கரூர் துயர சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட 8 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

  • அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ, பேரணிகளை ஒழுங்குபடுத்தி விதிமுறைகளை வகுக்க கோரி தூத்துக்குடி பொன் காந்திமதிநாதன், திருக்குமரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள்
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் ராஜன் வழக்கு
  • கரூர் ஆட்சியர், எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக கார்த்தீபன் வழக்கு
  • இந்தியாவில் GEN Z புரட்சியை தூண்டிவிடும் வகையில் பதிவிட்டதற்காக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது கரூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்; இதனை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வழக்கு
  • தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு
  • கரூர் துயர சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு பெஞ்ச் அமைக்க உத்தரவிட கோரிய வழக்கறிஞர் ஞானேஸ்வரன் வழக்கு
  • கரூர் துயர சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த வழக்கு

இந்த 8 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share