கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது நேற்று (செப்டம்பர் 27) நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர் கதறும் காட்சிகள் காண்போதை பதற வைக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
உயிரிழந்வர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 27 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் விஸ்வநாத புரத்தை சேர்ந்து ஹேமலதா என்ற தாயும், கரூர் தனியார் பள்ளியில் பயிலும் அவரது குழந்தைகளான சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோரும் உயிரிழந்தனர்.



