கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி வருவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரி திற்பரப்பு பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 18 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.