அரசின் அரவணைப்பு வேண்டும்… விஜய்யை சந்தித்த கமல்

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய்யை நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (மே 16) முதல்வர் விஜய்யை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

விஜய்யின் நீலாங்கரை இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் முதல்வரானதற்கும் வாழ்த்து கூறினார்.

ADVERTISEMENT

மேலும் விஜய்யிடம் சினிமாத் துறை தொடர்பாக கோரிக்கைகளையும் வைத்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share