உதிரிப் பூக்கள் எல்லாம் ஒரு படமா? கமல்ஹாசன் எல்லாம் ஒரு நடிகரா?

Published On:

| By Minnambalam Desk

திறமை இல்லை. ஆனால் எப்படியாவது பேமஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் என்ன செய்வார்கள்?

ஏதாவது குண்டக்க மண்டக்க யாரையாவது பேச வேண்டும்… இல்லை இல்லை.. ஏச வேண்டும். அப்படி ஏசினால் ஏசுபவருக்கு ஏசுநாதரை விட முக்கியத்துவம் தரும் உலகம் இது.

இல்லையா உலகமே அறிந்த உண்மையை மறுக்க வேண்டும்.

”கண்ணு.. உனக்குத் தெரியுமா கண்ணு..? ராஜராஜ சோழன் தெலுங்கு ஆள். கரிகால் சோழன் கன்னடன்” என்று உண்மைக்கு மாறாக மனநோயாளி போல உளற வேண்டும். உலகம் கொந்தளித்து திரும்பிப் பார்க்கும் இல்லையா? அப்படியே பிரபலம் ஆகலாம்.

ADVERTISEMENT

இல்லன்னா’ சார்லி சாப்ளினுக்கு நல்ல படம் எடுக்கவே தெரியாது. சிவாஜிக்கு நடிக்கவே தெரியாது. டைரக்ஷன்னா அகிரா குரோசோவாவுக்கு ஒண்ணுமே தெரியாது’ என்று லூசு மாதிரி உளற வேண்டும்.

அப்படி சொல்பவரைக் கழட்டி அடிக்க வருபவன் அடிப்பதற்கு முன்பு முகத்தைப் பார்ப்பான் இல்லையா? அப்போ சொன்னவன் முகம் அடிக்கிறவன் மனசுல பதியுது இல்ல. அப்படியே வி ஐ பி ஆகலாம்.

ADVERTISEMENT

கரெக்ட் தானே?

நடிகை தேவயானியின் கணவர் என்பதால் இன்னும் லைம் லைட்டில் இருக்கும் நபர் ராஜகுமாரன்.

அவர் சில படங்களை இயக்கினார். அவை எதுவும் நன்றாக ஓடியதாக வரலாறு புவியியல் இரண்டுமே இல்லை.

தேவயானியை தனது வீட்டை விட்டு இவரைத் தேடி ஓடி வர வைத்ததுதான் இவரது ஒரே சாதனை.

இவர் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில், ” நான் (இயக்குனர்) மகேந்திரன் படங்களைப் பார்த்ததே இல்லை. இப்பதான் உதிரிப் பூக்கள் பார்த்தேன். அந்தப் படத்தில் ஒண்ணுமே இல்லை.

கமல்ஹாசனை எல்லாம் பெரிய நடிகர்னு எப்படி சொல்றாங்கன்னு புரியல. நாலஞ்சு படம் தவிர அவர் நடிச்ச படம் எதுவுமே சரி இல்ல” என்று எல்லாம் தத்துவ முத்துக்களை அவர் வாயில் இருந்து கொட்டிய வேகத்தில், அவரது சில பற்களே உடைந்து வெளியே கொட்டி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

வாட்டர் மெலன் திவாகர் ஒருவர்தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம்.

ஆனால் அவர் எவ்வளவோ நல்லவர் என்று காட்டி விட்டார்…

தேவயானியின் அருமைக் கணவர் ராஜ ராஜ, ராஜாதி ராஜ,..

ராஜ மடத்தன..

ராஜகுமாரன் அவர்கள்! பலே. உங்களுக்கு எல்லாம் படம் கொடுத்த தமிழ் சினிமாவுக்கு உங்களது இந்த இழிவுப் பேச்சு நல்ல பரிசு.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share