தனது தம்பி நகுல் நடித்துள்ள வாஸ்கோடகாமா பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை தேவயானி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை தேவயானியின் தம்பியான நகுல் நடிப்பில் உருவாகியுள்ள “வாஸ்கோடகாமா” படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.
பாய்ஸ் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கி காதலின் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நகுல். சில படங்களில் நடித்துள்ளார்.
எரியும் கண்ணாடி, வாஸ்கோடகாமா ஆகிய இரண்டு படங்களில் நகுல் நடித்திருந்த நிலையில் இது இரண்டும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வாஸ்கோடகாமா படம் வெளியாகிறது.
இதை முன்னிட்டு படக்குழுவினர் இன்று (ஜூலை 20) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் நகுலின் அக்காவும், நடிகையுமான தேவயானியும் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “நகுல் என்னுடைய சின்ன தம்பி. அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர் பன்முக திறமை கொண்டவர். பாய்ஸ் படத்திலிருந்து காதலில் விழுந்தேன் படத்தில் நகுலின் நடிப்பு மாற்றம் வியப்பில் ஆழ்த்தியது.
அவருக்கு ஒரு நல்ல கதை, கதாபாத்திரம், இயக்குநர் வேண்டும். அதற்காக அவர் காத்திருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும். அந்த நேரம் அவருக்கும் வரும்.
நடனம், இசை என எல்லா துறையிலும் சிறந்தவர். அக்கா, தம்பி என இருவருமே இந்த துறையில் இருப்பது அற்புதமான விஷயம். இதுபோன்று எங்கும் இல்லை.
இன்று அம்மா, அப்பா இல்லை. அவர்களுடைய ஆத்மா நிச்சயம் நகுலை வாழ்த்திக் கொண்டிருக்கும். சந்தோஷத்தில் இருப்பார்கள்.
நகுல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக் கூடாது.
நான் நகுலுக்கு அக்கா கிடையாது. அம்மா… இன்று நான் சந்தோசமாக இருக்கிறேன்” என்று தேவயானி பேச பேச,
மேடையில் அமர்ந்திருந்த நகுல் கண்கலங்கினார். தேவயானி பேசி முடித்ததும், அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உச்ச நீதிமன்றம் காட்டம்… மையம் வாரியாக வெளியான நீட் முடிவு: பார்ப்பது எப்படி?