ADVERTISEMENT

சாதியை அடுத்து மதத்தில் குதிக்கும் மோகன் ஜி

Published On:

| By Minnambalam Desk

பழைய வண்ணாரப்பேட்டை என்ற வித்தியாசமான, ஆனால் ஓடாமல் போன படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.

அது செல்லுபடி ஆகாத நிலையில், தலித்தியப் படங்கள் தமிழில் அதிகம் வர, அதற்கு மாறாக ‘ நாடகக் காதல் ‘ என்ற விஷயத்தின் பக்கம் நின்று படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

ADVERTISEMENT

அப்படி வந்த திரௌபதி படத்துக்கு தலித் பிரிவினருக்கு எதிரான மன நிலையில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்க, அவங்க ரூட்டை தெளிவாகப் பிடித்து, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை எடுத்தார்.

இப்போது அடுத்து மோகன் ஜி எடுத்திருக்கும் படம் திரௌபதி 2.

ADVERTISEMENT

14 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாகும் இந்தப் படம் , ஹொய்சால அரசர்களின் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை போகிறதாம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்து சூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

” நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக் களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது.” என்கிறது படக்குழு. (ஏதாவது புரியுதா?)

ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆக சாதியில் இருந்து மதத்துக்கு புரமோஷன் ஆகி இருக்கிறார் மோகன் ஜி.

ராஜ மவுலி ஜி பாணியில் நம்ம ஊர் மோகன் ஜி ஜி!

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share