கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று (ஜூன் 26) காலை நிலவரப்படி 61ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தனர்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 220 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், இன்று காலை நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சியில் 111, சேலத்தில் 29, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர் என மொத்தம் 155 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணல் குவாரி முறைகேடு : ஐ.டி, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்!