”கலைஞரின் பிறந்தநாள் இனி செம்மொழி நாள்” : அமைச்சர் அறிவிப்பு!

Published On:

| By christopher

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (ஜூன் 24) நடைபெற்றது.

அப்போது அத்துறைகளின் அமைச்சரான மு. பெ. சாமிநாதன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

????மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும்.

???? சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான ப.சுப்புராயன் பிறந்த நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் சென்னையில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

சமூக நீதி கோட்பாடுகளுக்கு முதன் முதலில் சட்ட வடிவம் கொடுத்த அவருக்கு நாமக்கல் நகரில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மார்பளவு சிலை அமைக்கப்படுகிறது.  சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ. 17.50 லட்சத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

????இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாளான ஜனவரி 25ஆம் தேதி, அடுத்த ஆண்டு முதல் தமிழ்மொழித் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும்.

பிறமொழித் திணிப்பால் தாய்மொழி தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து இன்னுயிரை ஈந்த மொழித்தீரர்களின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.

???? எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரக வளாகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க லாரன்ஸ் கட்டடம் புதுப்பிக்கப்படும்.

????திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக ஒரு அரசு கிளை அச்சகம் துவங்கப்படும்.

????வீறுகவியரசர் முடியரசனுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.

????சிவகங்கை பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியருக்கு . ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச்சிலை. நிறுவப்படும்.

????கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த நாளான செப்டம்பர் 19 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும். அரசு அவருக்கு கோவில்பட்டியில் ரூ. 1.51 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையும், நூலகமும் அமைத்துள்ளது.

????செய்தியாளர்களின் பயன்பாட்டிற்காக சென்னை தலைமைச் செயலகப் பத்திரிக்கையாளர்கள் அறையானது ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

T20WorldCup : ஆஸ்திரேலியாவை பழிதீர்த்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share