சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் இன்று (மே 2) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. jp nadda visits aiadmk headquarters
இந்தக் கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று சென்னை வரும் நிலையில், அதிமுக செயற்குழு கூட்டத்தை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்தார்.
ஜேபி நட்டா உடனான சந்திப்பின் போது, “களத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விருப்பப்படுகிறார்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜேபி நட்டா சற்று யோசித்திருக்கிறார். இதனையடுத்து, “ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லவில்லை என்றால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினால் அதிமுக, பாஜக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்” என்றிருக்கிறார். இதற்கு ஜேபி நட்டா சம்மதித்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.jp nadda visits aiadmk headquarters