தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Jobs Guest Lecturers

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
2025-26 நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 4-ந் தேதி வரை (04.08.2025) தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.