கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. karnataka Dharmasthala
தட்சிண கன்னடா தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) கர்நாடகா மாநில அரசு அமைத்தது. மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரணவ் மொகந்தி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக பெங்களூரில் கர்நாடகா போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், தர்மஸ்தலா கோவில் நிலத்தில் பெண்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி சிறப்புப் புலனாய்வு குழு விரைவில் விசாரணை நடத்தும். இந்த குழுவில் இருந்து போலீஸ் அதிகாரிகள் விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. இந்த விசாரணையை பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பது ஏன் என்பது தெரியவில்லை என்றார்.
