பணியின் போது மரணமடைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. jobs for of village assistants heirs
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கூறுகிறது.
இதுதொடர்பான கேள்விக்கு சட்டப்பேரவையில், வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்திருந்தார். இதுகுறித்து அவர், “முதல்வரிடம் பேசி கால முறை ஊதியத்தினை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை கிராம உதவியாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படுதில்லை. ஆனால்10 நாட்களுக்கு முன்பாக கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கூறியிருந்தார்.

அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. 15.04.2025 தேதியிட்ட அந்த அரசாணையில், “
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி பணியிடையே மரணமடைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of pay) கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசு ஆணையிடுகிறது.
இவ்வாணை மனித வள மேலாண்மைத் துறையிடம் 11.04.2025 நாளில் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. மேலும், இந்நேர்வு தொடர்பாக தமிழ்நாடு குடிமைப்பணிகள் (கருணை அடிப்படையிலான பணிநியமனம்) விதிகள், 2023-க்கு உரிய திருத்தங்கள் மனித வள மேலாண்மைத் துறையால் தனியாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. jobs for of village assistants heirs