ஈரோடு மொடக்குறிச்சிக்கு அருகில் உள்ள கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 2 ஆவது நாளாக இன்று (செப்டம்பர் 18) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் எழுமாத்தூர் சாலையில் பிரபல எண்ணெய் நிறுவனத்திற்கு கொப்பரை சப்ளை செய்யும் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. மெய்யழகன் என்பவருக்கு சொந்தமான கொப்பரை இந்த நிறுவனத்தில் நேற்று 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
இந்நிலையில் இன்றும் 2 ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.