தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 18) 21 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை நிலவுகின்றன. இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
இந்த வானிலை காரணமாக செப்டம்பர் 18-ந் தேதி இன்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டும்.
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- விழுப்புரம்
- கடலூர்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- சேலம்
- திருவண்ணாமலை
- திருப்பத்தூர்
- நீலகிரி
- ஈரோடு
- வேலூர்
- ராணிப்பேட்டை
- பெரம்பலூர்
- அரியலூர்
- திருச்சி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
