பியூட்டி டிப்ஸ்: சரும பொலிவை ஏற்படுத்தும் மக்கானா… எல்லாருக்கும் ஏற்றதா?

Published On:

| By christopher

சமீப காலமாக, பிரபலங்கள் பலரும் தங்களது வீடியோக்களில் பாப்கார்ன் போன்று இருக்கும் மக்கானா என்ற பொருளை விதவிதமாக சமைத்துக் காண்பிக்கிறார்கள். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது என்கிறார்கள்.

மக்கானா என்பது என்ன… அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது… யாரெல்லாம் சாப்பிடலாம்  என்ற தகவல்களை ஊட்டச்சத்து ஆலோசகர்களிடம் பேசினோம்…

“மக்கானா என்பதை தாமரை விதை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது தாமரை குடும்பத்தின் ஒரு ரகமான அல்லி மலர்களின் விதை என்பதே உண்மை.

அல்லி என்பது நன்னீரில் வளரும் ஒரு தாவரம். பூவிலிருந்து விதைகளை தனியே பிரித்து, கழுவி சுத்தம் செய்வார்கள். பின் தோலுடன் வறுத்து அதன் தோலை நீக்கி விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

100 கிராம் மக்கானாவில் 347 கலோரிகள் இருக்கின்றன. கொழுப்புச்சத்து- 0, சோடியம் – ஒரு மில்லிகிராம், கார்போஹைட்ரேட்- 76 கிராம், புரதம் – 9 கிராம் இருக்கின்றன.

இவை தவிர்த்து கால்சியம், மெக்னீசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற சத்துகளும் இருக்கின்றன.

இத்தனை சத்துகள் இருக்கின்றன என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கி இதைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் தமிழ்நாட்டில் விளையும் சிறுதானிய வகைகளில் இதே அளவிலான சத்துகள் இருக்கின்றன.

எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அளவாக எடுத்துக் கொள்வது வரை எந்தப் பிரக்சினையும் கிடையாது.

மக்கானாவில் எவ்வளவு சத்துகள் இருந்தாலும் அதைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரியவர்கள், நாள் ஒன்றுக்கு 25 கிராம் முதல் 30 கிராம் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு 10 கிராம் மட்டும் கொடுப்பது நல்லது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் மக்கானாவை தொடர்ந்து சாப்பிடும்போது சருமம் பொலிவாக இருக்கும். இதில் உள்ள மெக்னீசியம், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்தின் பணிகளை முறைப்படுத்தும்.

கால்சியம் சத்து இருப்பதால் மூட்டுவலி பிரச்சினை, எலும்புத் தேய்மான பிரச்சினை இருப்பவர்கள் சாப்பிடலாம்.

மக்கானாவில் சர்க்கரை கிடையாது, சோடியமும் குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். ஆனால், மக்கானாவை சாப்பிடும் அளவில் மட்டும் கவனமாக இருங்கள்.

மக்கனாவில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை எளிதில் நிரப்பும். அதனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும், மேலும், மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும்.

இதனால்தான் டயட் இருக்கும் நபர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். சிலர் வெண்ணெயில் பொரித்து சாப்பிடுகிறார்கள், சிலர் பாயசம் வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

இப்படியெல்லாம் சமைத்துச் சாப்பிடும்போது அதில் உள்ள ஆரோக்கியம் நமக்கு முழுமையாகக் கிடைக்காது. மேலும், வெண்ணெய், சர்க்கரை, நெய் இவற்றையெல்லாம் சேர்த்துச் சமைக்கும்போது கொழுப்புச்சத்து, சர்க்கரை அளவு போன்றவையெல்லாம் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று விரிவாக விளக்கினார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்

வடகிழக்கு பருமழை… அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்!

தியேட்டரில் 100நாட்கள் ஓடிய சாமானியன்… இளையராஜாவை சந்தித்த ராமராஜன்

இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!

Is Makhana suitable for everyone?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share