வடகிழக்கு பருமழை… அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்!

அரசியல்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து நீர்வளத்துறை பொறியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று (செப்டம்பர் 10) ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பருவமழைக்கு முந்தைய முன்னேற்பாட்டு பணிகளாக ரூ.38.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளான வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம் மற்றும் அடையாறு போன்றவற்றில் உள்ள மிதக்கும் தாவரங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றினை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் வருகிற செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும்.

மேலும், நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளாக ரூ.590 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளான தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாய் போன்றவற்றில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் வருகிற செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தினார்.

தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள் மற்றும் சவுக்கு கம்புகள் ஆகியவற்றை பருவமழையினை எதிர்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே போதுமான இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டைவர்சுக்கு பிறகும் விடாது கறுப்பு… முன்னாள் கணவரை வச்சு செய்யும் துபாய் இளவரசி!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *