கால்பந்தில் இருந்து கண்ணீருடன் ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி

Published On:

| By christopher

Sunil Chhetri: இந்திய கால்பந்து அணியின் முகமாக அறியப்படும் ஜாம்பவான் சுனில் சேத்ரி, தனது 39 வயதில் இந்த விளையாட்டில் இருந்து பிரியாவிடை பெற்றுள்ளார்.

இந்தியாவுக்காக 2005 முதல் சுமார் 19 ஆண்டுகளாக கால்பந்து விளையாடிவரும் சுனில் சேத்ரி, இதுவரை இந்த தேசத்தை சர்வதேச அரங்கில் 151 முறை பிரதிநிதித்துவப்படுத்தி களம் கண்டுள்ளார்.

அந்த 151 போட்டிகளில் 94 சர்வதேச கோல்களையும் சுனில் சேத்ரி சேர்த்துள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற பிபா உலகக்கோப்பை தகுதி சுற்று தொடரில்,

குவைத் அணிக்கு எதிராக கடைசியாக ஒருமுறை இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சுனில் சேத்ரி களம் கண்டார். இப்போட்டி 0-0 என சமனில் முடிந்தது.

இப்போட்டி முடிந்தவுடன், மொத்த மைதானமும் எழுந்து நின்று, மிகப்பெரிய கரகோஷத்துடன் இந்த கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரிக்கு பிரியாவிடை அளித்தது.

தொடர்ந்து, இந்தியா மற்றும் குவைத் வீரர்கள் இணைந்து சுனில் சேத்ரிக்கு ‘காரட் ஆஃப் ஹானர்’ மரியாதை வழங்கினர். அதை ஏற்றுக்கொண்ட சுனில் சேத்ரி, கண்கள் கலங்கியபடி கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

Sunil Chhetri retired from football

இந்திய கால்பந்திற்கு தான் ஆற்றிய மகத்தான பங்கிற்காக, 2011-ஆம் ஆண்டு இந்திய அரசின் அர்ஜுனா விருதை வென்ற சுனில் சேத்ரி, 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றார்.

தொடர்ந்து, பல லட்சம் இளம் இந்தியர்களின் பார்வையை கால்பந்தை நோக்கி திருப்பிய அவருக்கு, 2021-ஆம் ஆண்டு கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து ஆட்டங்களில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ (128), அலி டேய் (108) மற்றும் லியோனல் மெஸ்ஸி (106) ஆகியோரை தொடர்ந்து, சுனில் சேத்ரி (94) 4வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: காரில் போகும்போது வரும் வாந்தி… தடுப்பது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் ராகுல்காந்தி வழக்கு வரை!

கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share