விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தன்னுடன் அல்வா உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார். Indian astronaut who took halwa to space
அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, ஹங்கேரியின் திபோர் கபு, அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் போலந்தின் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ஏவுகணை மூலம் ‘டிராகன்’ விண்கலம் விண்ணில் பாய்ந்துள்ளது.
36 மணி நேர பயணத்துக்கு பின் நாளை மாலை 4.30 முதல் 5 மணிக்குள் இந்த குழு விண்வெளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணம் குறித்து சுபான்ஷு சுக்லா கூறுகையில், “எனது அன்பான நாட்டு மக்களுக்கு நமஸ்காரம். 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விண்வெளியை அடையவுள்ளோம்.
ஒரு அற்புதமான பயணம். எனது தோளில் மூவர்ணக் கோடி உள்ளது. அது, நான் தனியாக இல்லை. நீங்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. நாட்டு மக்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நாம் ஒன்றிணைந்து இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்” என்று கூறியுள்ளார்.
விண்வெளிக்கு கிளம்புவதற்கு முன்னதாக செய்தி ஊடங்களுக்கு அவர் அளித்த பேட்டியின்படி, மாம்பழச் சாறு, காரட் அல்வா, பாசிப்பயறு அல்வா போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார் சுபான்ஷு சுக்லா.
இதையெல்லாம் விண்வெளியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொடுத்து ஒன்றாக சாப்பிடவே விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்காக ஒரு சிறப்பான ஆச்சரியமான பொருளையும் விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ள அவர், அந்த பொருள் என்ன என்பதை ரகசியமாக வைத்திருப்பதாகவும், நான் விண்வெளியிலிருந்து திரும்பி வரும்போது அந்த பரிசை வெளிப்படுத்துவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். Indian astronaut who took halwa to space









