இந்திய வீர‌ர் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளி பயணம்- நாசா அறிவிப்பு

Published On:

| By Minnambalam Desk

Shubhanshu Shukla NASA

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் விண்வெளிக்கு நாளை ஜூன் 25-ந் தேதி பயணமாகிறார் என நாசா அறிவித்துள்ளது. Subhanshu Shukla
இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம்-4 திட்டத்தை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்படும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு உள்ளிட்டோரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்தான் ஆக்சியம்-4. இத்திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9- ராக்கெட் மூலம் நால்வரும் விண்வெளிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஜூன் 22-ந் தேதி சுபான்ஷு சுக்லா குழு விண்வெளிக்குப் புறப்பட இருந்த நிலையில் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இத்திட்டம் 6 முறை மாற்றப்பட்டது.

தற்போது, சுபான்ஷு சுக்லா குழுவினர் விண்வெளி நிலையத்துக்கு நாளை ஜூன் 25-ந் தேதி பயணம் மேற்கொள்ள இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share