ADVERTISEMENT

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்- சுதந்திர தின உரையில் மோடி அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

PM Modi Independence Day Speech

எந்த ஒரு நாட்டின் அணு ஆயுத மிரட்டலுக்கும் இந்தியா ஒரு போதும் அச்சப்படாது என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு தலை வணங்குகிறேன். நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 140 கோடி மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

நாட்டில் கடந்த சில நாட்களாக இயற்கை பேரிடர்களால் பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு உறுதுணையாக நிற்கிறது.

ஆபரேஷன் சிந்தூர்

ADVERTISEMENT

75 ஆண்டுகளாக ஜனநாயகம் நம்மை வழிநடத்திச் செல்கிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்களின் மதம் என்ன என்று கேட்டு படுகொலை செய்தனர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதுதான் ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்று உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு தக்க பதிலடி தந்தோம். எதிரிகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பதிலடியை தந்துள்ளோம்.

அணு ஆயுத மிரட்டல்- அச்சமில்லை

ADVERTISEMENT

தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளித்து ஆதரவளிப்போரை அழித்தொழிப்போம். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடிவிட முடியாது. எந்த ஒரு நாட்டின் அணு ஆயுத மிரட்டலுக்கும் இந்தியா ஒரு போதும் அஞ்சாது.

சிந்து நதிநீர் ஒப்பந்தம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஒருதலைபட்சமானது. பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தத்தால் 70 ஆண்டுகளாக நமது நாட்டின் விவசாயிகள்தான் பாதிக்கப்பட்டனர். சிந்து நதிநீர் இந்திய விவசாயிகளுக்கே சொந்தமானது.

தற்சார்பு இந்தியா புதிய முழக்கம்

தற்சார்பு இந்தியாதான் நமது முழக்கம். டாலர் பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல. நடப்பாண்டுக்குள் செமிகண்டக்டர் ஆலை அமைக்கப்படும். நமது நாட்டிலேயே செமிகண்டகர் சிப் உற்பத்தி செய்வது உறுதி. எரிசக்தித் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும். கனிம வளத்தில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டும். தற்சார்பு மூலம் முன்னேற்றம் என்பதுதான் இந்தியாவின் புதிய முழக்கம்.

நாட்டின் அணுசக்தித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எரிசக்தித் துறையில் இந்தியா தற்சார்பு அடையும். இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பியுள்ளார். அவரை இந்த தருணத்தில் நாம் பாராட்டுகிறோம்.

உள்நாட்டிலேயே போர் விமான இன்ஜின் தயாரிப்பு

விமானப் படையின் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்மால் தற்பு சார்பு நிலையை அடைய முடியும். தகவல் தொழில்நுட்பம் முதல் சைபர் பாதுகாப்பு வரை தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம்.

அணுசக்தி துறையில் தனியார்

அன்று கொரோனா தடுப்பூசி வழங்கி பல கோடி மக்களின் உயிரைப் பாதுகாத்தோம் என்பதை நினைவில் வைத்து கொள்வோம். இந்தியாவின் அணுசக்தித் துறைக்கான கதவுகள் தனியாருக்காக திறந்தே உள்ளன. சமூக வலைதளங்களுக்காக ஏன் நாம் வெளிநாடுகளை சேர்ந்திருக்க வேண்டும்? தற்சார்பு மூலம் பதில் தருவோம். உலக நாடுகளின் சந்தையை நாம் ஆள வேண்டும். அணுசக்தி உற்பத்தியை இந்தியா அதிகரிக்கும். சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். ஆகையால்தான் தற்சார்பு முழக்கத்தை முன்வைக்கிறோம். செயற்கை நுண்ணறிவு AI துறையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஏற்கனவே டிஜிட்டல் வங்கி துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. இதேபோல அனைத்து துறைகளிலும் பாரதம் சாதனை படைக்கும்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கான நேரம் வந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நடப்பாண்டில் நடுத்தர வர்த்தக்கத்தினருக்கு இனிய தீபாவளியாக இருக்கும். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் இந்தியாவில் பொருட்கள் விலை கணிசமாக குறையும். நாட்டின் விவசாயிகள், மீனவர்களை நாம் கைவிடமாட்டோம். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share